2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தமிழகத்தில் இன்றும்,நாளையும் இடி, மின்னலுடன் மழை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை ;

தமிழகத்தின் பல மாவட்டங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டியில், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும். இன்று, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். அரியலூர், பெரம்பலூர், கள்ளக் குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை; ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை பெய்யும்.  ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை; மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .