2026 மார்ச் 09, திங்கட்கிழமை

தமிழகத்தில் பாஜக தனிநபரை எதிர்த்தே போராட்டம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பாஜக தனிநபரை எதிர்த்தே போராடுவதாகவும், யாருடைய உரிமைக்காகவும் போராடவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி 

அண்ணாசிலை அருகே இன்று (அக். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  

இதில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக  உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழக அரசு தொடுத்த வழக்கில், மருத்துவக் கல்லூரி யில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும்.

இதுகுறித்து 3 மாத காலத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக் கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

அதில், மத்திய அரசு இதுகுறித்து எந்தக் கொள்கை முடிவும் இதுவரை எடுக்கவில்லையெனவும் திருமாவளவன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .