2026 மார்ச் 07, சனிக்கிழமை

தமிழினப் பெருமையைத் தடுக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை ;

தமிழின பெருமையைத் தடுக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  காரைக்குடி – திருப்பத்தூர் சாலை அருகில் நடைபெற்ற, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரசார நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழகத்தின் தமிழினத்தின் பெருமைக்கு அடையாளமாகச் சொல்லக் கூடிய கீழடி சிவகங்கை மாவட்டத்தில் தான் உள்ளது. சங்ககாலப் பெருமை பேசுகிறோம் என்றால் அவை அனைத்தும் உண்மை என்பதற்கான ஆதாரம் தான் இந்த கீழடி. நம்முடைய தமிழர் நாகரிகமும் பண்பாடும் 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையது என்பதற்கான ஆதாரம் உள்ள மண் , இந்த கீழடி மண்.

அந்தப் பெருமைகூட தமிழினத்துக்கு கிடைத்துவிடக் கூடாது என்று தடுத்த தமிழின விரோத அரசு தான் மத்திய பாஜக அரசு.கீழடியை ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறையின் அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினார். அதற்கு அடுத்த ஆண்டும் ஆய்வு நடத்தினார்.

தமிழர்கள் எத்தகைய பெருமைக்குரிய இனமாக வாழ்ந்துள்ளார்கள், அனைவரும் நாகரிகத்தில் எவ்வளவு முன்னேறிய மக்களாக இருந்துள்ளார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார். உடனே அமர்நாத் ராமகிருஷ்ணனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள்.

தமிழனின் பெருமை வெளியில் வரக் கூடாது - தமிழின் பெருமை உலகம் அறியக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்களுக்கு - தமிழர்களின் வாக்கு மட்டும் எதற்காக வேண்டும்? தமிழுக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு தமிழனின் வாக்கு மட்டும் எதற்காக? என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்க விரும்புகிறேன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .