2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

தமிழ்நாடு பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 20 பேர் பலி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு தயாரிக்கும் மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இன்று விடுமுறை நாளாக இருந்தும் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .