Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 23 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிநாசி :
மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தையொட்டியவாறு தர்கா உள்ளது. இப்பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்திலுள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரம் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தர்கா ஹஜ்ரத், சம்சுதீன் கூறியதாவது: திருமணம், குழந்தைப் பாக்கியம், தொழில் விருத்தி என, எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால், சாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் கானூர் தர்காவுக்கு வருகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது, இப்பகுதியில் உள்ள மக்கள், தீபம் ஏற்றுவது வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்கி வருகிறது. அதேபோல, சந்தனக்கூடு உரூஸ் விழாவுக்கும், அனைத்து மதத்தினரும் தர்காவுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
12 minute ago
38 minute ago
41 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
41 minute ago
51 minute ago