2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தலைக் கவசத்துடன் பஸ் ஓட்டும் சாரதிகள்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தி வரும் 12 மணி நேர கடை அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஸ் டிரைவர்கள் தலைக்கவசம் அணிந்து பஸ்களை இயக்கி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. நீதி கேட்டு மாணவர்கள் போராட, அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பா.ஜ., முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அறிவித்தபடி, போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஹ_க்ளி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி போராடிய பா.ஜ., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். கூச் பீகார் பகுதியில் மாணவர் அணி தலைவர் சத்யன் லஹரி என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அலிபுரதுவார் பகுதியில் போராட்டம் நடத்திய ஏராளமான பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். பிதன்னா நகர் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் இறங்கி உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பஸ்களில் சாரதிகள் தலைக்கவசம் அணிந்தபடி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு உத்தரவுபடி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதாக அவர்கள் கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X