Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 12 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதற்கெடுத்தாலும் முதல்வரையும், திராவிட முன்னேற்ற கழகத்தையும் (தி.மு.க) தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையென திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) அலுவலக வன்முறைக்கும், தி.மு.கவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
பின்னர்இ செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிஸார் அ.தி.மு.க.இ தொண்டர்களையே தாக்கியுள்ளனர். பொலிஸாருடன் கூட்டு வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
திமுக அரசும், ஓ.பன்னீர்செல்வமும் கைக்கோர்த்து இதனை செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம் என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே ஆர்.எஸ்.பாரதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .