2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தாம்பத்திய உறவுக்கு பரோல் கேட்ட மனைவி

Editorial   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையில் இருக்கும் தனது கணவனுக்கு பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாம்பத்திய உறவுக்காகவே தனது கணவனை பரோலில் விடுவிக்குமாறு, அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி, அம்மனுவை நிராகரித்துவிட்டார்.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலேயே அவரது கணவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்தரிப்பு சிகிச்சைக்காகவே அவரது மனைவி, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சிறையில் இருக்கும் குற்றவாளியான இவர், சாமான்ய மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவித்தால், தப்புச் செய்தவர்களுக்கும் தப்பு செய்யாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் என, நீதிபதி கேட்டுள்ளார்.

சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும் சட்டத்தை மீறி நடப்போருக்கும் இடையில் வித்தியாசம் என்ன? என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

அதனால் தாம்பத்திய உறவுக்காக கணவனுக்கு பரோல் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .