2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்து வந்த சிறுவனால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய் உறங்குவதாக நினைத்து தாயின் சடலத்துடன் சிறுவனொருவன் நான்கு நாட்கள் வசித்து வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பதி வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. 41 வயதான இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கும் இவரது கணவர்   ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர் தனது கணவனைப் பிரிந்து தனது 10 வயதான மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகத்  தலைவலியினால் ராஜலட்சுமி அவதிப்பட்டு வந்ததாகவும் இதனால் கடந்த கடந்த 8ஆம் திகதி இரவு உணவை உண்டுவிட்டு உறங்கச் சென்றதாகவும் இதன் போது அவர் படுக்கையிலிருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

 எனினும் தாய் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார் என நினைத்த ஷியாம்

அவரை எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவுப் பொருட்களை உண்டுவிட்டு பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நான்கு நாட்களின் பின்னர் ராஜலட்சுமியின் உடலில்  துர்நாற்றம் வீசத் தொடங்கியதால்  அச்சமடைந்த ஷியாம்  இதுகுறித்து தனது மாமாவிடம்  தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவர் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அவர் ” இத்தனை நாட்களாக  இது குறித்து ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என ஷியாமிடம் கேட்டதாகவும் அதற்கு ஷியாம் ”தாய் தூங்குவதாகவும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து யாரிடமும் சொல்லவில்லை எனவும்  தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அவர் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .