2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தாயைக் கொன்ற ‘நீட்’

Editorial   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாயின் கழுத்தை கராத்தே பெல்டால் சுற்றி இறுக்கி, அவருடைய 15 வயதான மகளே படுகொலைச் செய்த விவகாரம் நவிமும்பை ஐரோலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தம்பதிக்கு 6 வயதில் மகனும் உள்ளார். 15 வயதான மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டு,  நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்தில் பதிவு செய்தனர்.

ஆனால், டாக்டருக்கு படிக்க தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து வந்தாள். இதை ஏற்காத பெற்றோர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும்படி சிறுமியை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஒருமுறை கோபித்துக்கொண்டு சிறுமியும் வீட்டை விட்டு வெளியேவிட்டாள், இந்தவிவகாரம் பொலிஸ் வரைக்கும் சென்றுள்ளது. அங்கு சிறுமியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியின் போனிலிருந்து கணவனின் வட்ஸ்அப்புக்கு     ‘நான் விடைபெறுகிறேன்' என்று செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சற்றுநேரத்தில், தனது தந்தைக்கு  தொலைபேசி அழைப்பை எடுத்த சிறுமி,     “கதவை திறக்க அம்மா மறுக்கிறார்” என கூறியுள்ளார். கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது. அங்கு அப்பெண் பிணமாக கிடந்துள்ளார்.
 
அப்போது 15 வயது சிறுமி மீது பொலிஸாருக்கு சந்தேகப்பார்வை எழுந்தது. சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து நடந்த விவரத்தை கூறும்படி கேட்டனர். அப்போது தாயை கொலை செய்து விட்டு, உண்மையை மறைக்க முயன்றதாக சிறுமி கூறிய தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது.

எனது படிப்பு தொடர்பாக தாயுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது தாய் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து என்னை மிரட்டினார். என்னை கொல்ல வருவதாக பயந்தேன். உடனே தாயை தள்ளி விட்டேன். அவர் கீழே விழுந்தபோது கட்டிலில் அவரது தலை பட்டு காயம் அடைந்தார். அரை மயக்கத்தில் கிடந்த தாயை கராத்தே பெல்டை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இப்படியொரு விபரீத கொலை நடந்து இருப்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X