2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திடீரென பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற 4 வயதுச் சிறுவன்; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி அடுத்த சித்தூரில் 4 வயது சிறுவன் ஒருவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யுமாறு கேட்டுக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலமனேர் நகரை சேர்ந்த சிறுவனே இவ்வாறு அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ”தான் கல்வி கற்கும் பாலர் பாடசாலை அருகே போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், இதனால் தயவு செய்து போக்குவரத்தை சீர்செய்து தருமாறும் ” கோரிக்கை விடுத்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொலிஸார், போக்குவரத்தை சரி செய்வதாகக் கூறி சிறுவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .