2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் திமிங்கல எச்சத்தை கடத்தி வருகின்றனர்

இந்நிலையில் திருச்சூர் நகர பகுதியில் பொலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில் 3 பேர் 5 கிலோ கிராம் எடையுள்ள திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி சென்று அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திமிங்கல எச்சத்தை கடத்தி கொண்டு சென்ற 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ கிராம் திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு இலங்கை மதிப்பில் ரூ19.7 கோடி ஆகும். இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் ​பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .