A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
"திமுக ஆட்சியில் மதுரை கப்பலூர் டோல்கேட் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடந்தது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினிடம், மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதி குறைகளைத் தெரிவித்தனர்.
அப்போது, திருமங்கலத்தைச் சேர்ந்த வாசு பேசுகையில், ‘‘19 ஆண்டுகளாக அம்பியூலன்ஸ் டிரைவராகப் பணியாற்றி வருகிறேன். திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா சுற்றவட்டாரப் பகுதிகளில் நான்கு வழிச்சாலை களில், மற்றப் பகுதிகளில் எத்தனையோ விபத்துகள் தினமும் நடக்கிறது.
நாங்கள் அவர்கள் உயிர்களைக் காப்பாற்ற அம்பியூலன்ஸ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், உயிருக்குப் போராடுகிறவர்களை அவசரத்துக்கு அம்பியூலன்ஸ் கூட போக முடியவில்லை.
சட்டத்தை மீறி திருமங்கலம் நகராட்சிக்குள் டோல்கேட் அமைத்துள்ளனர். விபத்துகள், ஆபத்துகள் நடக்கின்றன. இந்த டோல்கேட்டால் விபத்துகளில் காயமடைந்தவர்களை விரைவாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த டோல்கேட்டை அகற்ற எத்தனையோ ஆட்சியாளர்களிடம் முறையிட்டுள்ளோம். அது நடக்கவில்லை,’’ என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago