2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருப்பதி உண்டியல் வசூல் ரூ.3 கோடி

Freelancer   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலான நிலையில் நேற்றையதினம் ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. 

தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் திருப்பதிக்கு தரிசனத்துக்காகச் சென்று வருகின்றனர். 

திருப்பதியில் நேற்று 28,513 பக்தர்கள் தரிசனம் செய்ததுடன், 13,707 பேர் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். அத்துடன். ரூ.3.01 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

பிரம்மோற்சவ விழா முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
கொரோனா விதிமுறைகளின்படி திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .