2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருப்பதி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புரட்டாசி மாத வருடாந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி கொடியிறக்க நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.

தினமும் கோயிலுக்குள் காலையும், மாலையும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. காலம் காலமாக இடம்பெறும் வழக்கப்படி, ஆந்திர அரசு சார்பில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இம்முறை பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். 

ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இரவு கருட சேவை நடைபெற உள்ளதால், அன்றைய தினம் மாலை ஜெகன் மோகன் ரெட்டி, தலையில் பட்டு வஸ்திரம் சுமந்து சென்று தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.

இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் சிலர் அமராவதியில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு சென்று, அவருக்கு பிரம்மோற்சவ அழைப்பிதழ் மற்றும் சுவாமியின் பிரசாதங்களை வழங்கி பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .