2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருப்பதியில் சன்மானம்

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி விவரித்தார். அதன்படி தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரம்மோற்சவ சன்மானம் வழங்க மொத்தமாக சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எதிர்வரும் 23-ந் திகதி நடைபெறும் சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X