2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு; ஒருவர் மரணம்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் திருமண ஊர்வலமொன்றில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கண்ணூர் என்ற இடத்தில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற திருமண இசை நிகழ்ச்சியொன்றில் இரு  பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இவ்வாக்குவாதம் மோதலில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், குறித்த திருமணசடங்கு முடிந்து நேற்று புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஜிஷ்ணு என்பவரின் கும்பல் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இது தொடர்பில்   4 பேரைப்  பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X