2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

திருமண மேடையில் மரணித்த இளம் பெண்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இளம் பெண்ணொருவர் திருமண மேடையில் வைத்து உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம்  ஸ்ரீநிவாஸ்பூரில் சைத்ரா (25) என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சைத்ராவும், மணமகனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுது்து சைத்ராவை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித் போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில்  சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X