2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

திருமணமான கையோடு தம்பதி செய்த செயல்

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் மாநில தேர்தல் நடைபெற்றுவரும் நிலையி் மக்கள் விறுவிறுப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணமான ஜூலி என்ற பெண் தனது கணவருடன் திருமண கோலத்தோடு ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

இன்று காலை திருமணம் செய்துகொண்டுள்ள குறித்த தம்பதி தனது வீட்டிற்குச் செல்வதற்கு  முன் பிரோசாபாத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த பட்டுவருகின்றது. அதன்படி, முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. 

இன்று 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .