2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திருமணம் செய்யுமாறு கூறிய காதலியை எரித்த காதலன்

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் செய்ய வலியுறுத்தியதால் காதலி மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரே இவ்வாறு தனது காதலியான தானிஷ்வரியைக் கொலைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்த நிலையில் ”தன்னைத் திருமணம் செய்துக்கொள்ளும்படி ரவிக்குமாரிடம் தொடர்ந்து தானிஷ்வரி வலியுறுத்தி வந்ததாகவும்”  இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் கடந்த 16 ஆம் திகதி தானிஷ்வரி மீது பெட்ரோலை  ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானிஷ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்து வழக்கப் பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய சிவகுமாரைத் தேடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது  அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .