2026 மார்ச் 09, திங்கட்கிழமை

திருமாவளவனை கைது செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமாவளவனை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து துறவிகள் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெண்களைத் திருமாவளவன் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். இவ்வாறு பேசக் கூடிய தேச விரோதிகள் அதிகமாகிவிட்டனர். 

இதற்கு நாங்களும், அனைத்து சமுதாய மக்களும், அனைத்து சமுதாயத் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத்  தெரிவிக்கின்றோம்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது இந்து சமுதாய விரோதிகளுக்கு இந்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம். திருமாவளவனை விரைவில் கைது செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் இந்து துறவிகள், இந்து சமுதாயத் தலைவர்கள், அனைத்துத் தாய்மார்கள் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .