2026 மார்ச் 09, திங்கட்கிழமை

’திருவிழாக் காலம்;வைரஸ் தீவிரமடையக் கூடும்’

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அறிவித்த பொது முடக்க கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு, தற்போது ஊரடங்கு தளர்வு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில்   நாட் டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

இந்தியாவில் இது திருவிழாக் காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமடையக் கூடும் என்று  எச்சரித்த மோடி, காணொளி

சமூக ஊடகங்களில் விவாத பொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.

நரேந்திர மோடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியை டிஸ்லைக் செய்திருந்தனர்.

இதன் காரணமாக அந்தக் காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திர மோடியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் இலட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டிருக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .