2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

திரைப்படம் பார்க்க பொலிஸாருக்கு விடுமுறை

Ilango Bharathy   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற பொலிவூட் திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை வெளியானது.

இத் திரைப்படமானது ”காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை ” அடிப்படையாகக் கொண்டது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில்மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப் படத்துக்கு அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்தியபிரதேச பொலிஸார் இத்திரைப்படத்தைப்  பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அம்மாநில உள்ளாட்சித் துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .