2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீர்த்த கிணறுகளில் புனித நீராட அனுமதி

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 01 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமேசுவரம்

இராமேசுவரம் இராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்துக்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 6 மாதத்துக்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400இக்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.  தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து   கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்த நிலையில் இராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இன்று திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .