Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Mithuna / 2023 நவம்பர் 29 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் ஒருவர் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.
துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த அந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். இச் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இச் சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் குத்துச்சண்டை வீரர் ஒருவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரையும் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் பொலிஸார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago