2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

தும்புவுக்கு கல்லறை

Ilango Bharathy   / 2022 மார்ச் 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் ஒருவர் தான் பாசமாக வளர்த்த நாய்க்கு கல்லறை கட்டிய சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சீனிவாஸ். ஐதராபாத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 2014ஆம் ஆண்டு நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்தார். அந்த நாய்க்குட்டிக்கு அவர் தும்பு என்று பெயரிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி சிறுநீரகக் கோளாறு காரணமாக  தம்பு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக பாசத்துடன் வளர்த்த நாய் பிரிந்ததால் சீனிவாஸ் மிகுந்த வேதனை அடைந்த அவர் அந்த நாய் உடலை அவர் தனது சொந்த ஊரான குண்டூருக் எடுத்து சென்று அடக்கம் செய்தார்.

பின்னர் அதே இடத்தில் நினைவிடம் ஒன்றையும்  கட்டியுள்ளார். அதில், தும்புவின்  உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தும்பு போன்று மற்றொரு நாயை புதிதாக  வளர்த்து வருகின்றார். மேலும் அந்த நாய்க் குட்டிக்கு அவர் ‘தும்பு ஜூனியர்’ என்றும் பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் தும்புவின் கல்லறைப் புகைப்படங்கள்  இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .