2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

துஷ்பிரயோகத்துக்குப் பின் தூக்கி வீசப்பட்ட சிறுமி கம்பியை பிடித்து தப்பியது

Editorial   / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமி, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளி பக்கம் நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதையடுத்து சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி கிணற்றில் தள்ளி விட்டதும் அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியை பிடித்து உயிர் தப்பியுள்ளார். நடந்ததை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். 

அதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்த பொலிஸார். அவருக்கு எதிராக,    கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .