2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தெருநாய் கடித்தால் ரூ.10,000 இழப்பீடு

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தெருவிலங்குகளால் பாதிக்கப்பட்டது தொடர்பான 193 மனுக்களை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது நீதிபதி, “நாய், மாடு போன்ற கால்நடை விலங்குகளால் தாக்கப்படுபவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கு அரசு முதன்மையான பொறுப்பை ஏற்க வேண்டும். தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பல் அடையாளத்துக்கும் குறைந்த பட்சம் ரூ.10,000 இழப்பீடு வழங்க அவை முன்வர வேண்டும். அதேபோன்று, 0.2 சென்டி மீட்டர் காயத் துக்கு குறைந்தபட்சம் ரூ.20,000 இழப்பீட்டை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X