2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேங்காய்ச் சண்டை கொலையில் முடிவு

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொளத்தங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஒரு கடை உரிமையாளர். இவரது பக்கத்து வீட்டார், 'வீட்டு தென்னை மரத்தில் இருந்து,எங்கள்  வீட்டு வாசலில் தேங்காய் விழுவது தொடர்பாக, ஏற்கெனவே பலமுறை சொன்னதில் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடை உரிமையாளரின் மகளின்  திருமணம் அண்மையில் நடைபெற்றுள்ளது. இவ்வேளை, அவரது வீட்டில் உறவினர்களுடன் இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பக்கத்து வீட்டார், 'வீட்டு வாசலில் அடிக்கடி தேங்காய் விழுகிறது. மரத்தை வெட்டாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' என கேட்டு, ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், தகராறு மேலும் வலுப்பெற்று சத்தங்கள் எழுந்தன.

ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டாரும், அவரது சகோதரரும் இணைந்து, இரும்பு பைப் மற்றும் கட்டையால் கடை உரிமையாளரைத் தாக்கினர். பலத்த காயமடைந்த கடை உரிமையாளர், விருத்தாசலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். பக்கத்து வீட்டார் நேற்று மாலை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X