2026 மார்ச் 04, புதன்கிழமை

“தேசத்தின் கனவுகளை நனவாக்குவேன்”

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்கள் இன்று (நேற்று) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நான் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நாடு இருக்கிறது. அங்கு அமைதி நிலவ வேண்டும். அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இம்முறை இயற்கைப் பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை உள்ளன. இவை, தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த ஆயிரம் ஆண்டுகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில், நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன். இந்த காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதும், நாம் நமது அடிகளை எவ்வாறு வைக்கிறோம் என்பதும், ஒன்றன்பின் ஒன்றாக நாம் எவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதும் வரும் ஆயிரம் ஆண்டுகளில் நாடு பொன்னான காலத்தைப் படைக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .