2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடை

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் கடந்த 6-ம் திகதி மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் தலைப்பாகை, ஹிஜாப், தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மைசூருவில் தாலியை அகற்றிவிட்டுபெண் பட்டதாரிகளை, தேர்வு மையத்துக்குள் அனுமதித்தது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கர்நாடக பணியாளர் தேர்வாணையம் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. அதில், “இனி தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தாலி, கழுத்து சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X