2026 மார்ச் 09, திங்கட்கிழமை

தேவைப்பட்டால் வெளிநாட்டுலும் இந்தியா சண்டையிடும்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால், சொந்த எல்லையில் இருந்தபடி மட்டுமின்றி, வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.

லடாக் எல்லையில் இந்தியாவுடன் சீனா கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், அஜித் தோவ லின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து பேசியதாவது:

"இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாது காப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது.

இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்த சண்டையானது இந்தியா வின் தனிப்பட்ட விருப்பங்களுக்கானதாக ஒருபோதும் இருக்காது.

ஆனால், அது பரமார்த் ஆன்மிகத்தின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கும்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .