2025 மே 08, வியாழக்கிழமை

தொடங்கியது மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல்!

Freelancer   / 2024 மே 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது.

7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்தது. இந்நிலையில், 94 தொகுதிகளில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதன்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் கடந்த கட்டத்தில் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறாத பெதுல் தொகுதி உட்பட 9 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்குவங்கம், அசாமில் தலா 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், டையூ டாமனில், தாத்ரா நகர் ஹவேலி ஆகியவற்றிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இதில், குஜராத் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவும் இன்று தங்களின் ஜனநாயக கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X