2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தொலைபேசியை விழுங்கிய கைதியால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 20 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கைதியொருவர் தொலைபேசியை விழுங்கிய சம்பவம் டெல்லி திகார் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் பாதுகாப்பு காரணம் கருதி  கைதிகளிடம் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு  வருகின்றது.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 29 வயது மதிக்கத்தக்க கைதியொருவர், பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தான் வைத்திருந்த தொலைபேசியை விழுங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட  அதிகாரிகள் அக் கைதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி செய்த வைத்தியர்கள்  வாய்வழியாக தொலைபேசியை எடுத்துள்ளர். இதனையடுத்து சிகிச்சைகளுக்குப் பின்னர் அக்கைதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .