A.K.M. Ramzy / 2021 மார்ச் 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு தோசை ஊற்றி கொடுத்து பரிமாறி நூதன முறையில் வாக்கு சேகரித்தார் திருமயம் அமமுக வேட்பாளர் முனியராஜ்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு முறைகளில் நூதன பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முனியராஜ், திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவாரங்காடு, கடியாபட்டி கண்ணங் காரக்குடி,உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் கடியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள உணவகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் வாடிக்கையாளருக்கு தோசை ஊற்றி கொடுத்து பரிமாறி நூதன முறையில் வாக்காளர்களை கவரும் விதமாக வாக்கு சேகரித்தார்.
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago