2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’நசுங்கியதில் இறந்த புதுமணத் தம்பதிகள்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 02 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரக்கோணம்:

 லொறி கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது கவிழ்ந்ததால்,    திருமணமாகி 4 நாட்கள் கடந்த தம்பதியினரின் உடல் நசுங்கி  ஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இருவரும் பெருங்களத்தூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிலிருந்து அரக்கோணத்தில் கணவனின்  வீட்டிற்கு செல்ல இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர்.

அப்போது,பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரக்கோணத்திலிருந்து எதிரே வந்த சீமெந்து ஏற்றிவந்த லொறியொன்று, கூவம் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.

இதில் காருக்குள் இருந்த இருவரும் உடல் நசுங்கி ஸ்தலத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மப்பேடு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீது கவிழ்ந்து கிடந்த லொறியை அப்புறப்படுத்தினர்.

பிறகு காரை உடைத்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   திருமணமான 4 நாளில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .