A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை;
மறைந்த நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகனும், பாரதிய ஜனதாவில் (பா.ஜ) இணையப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த இந்திரா, காமராஜர் போன்றவர்கள் தலைமையில், காங்கிரஸ் கட்சியில், தீவிரமாக பணியாற்றியவர், சிவாஜி கணேசன். அவர்களின் மறைவுக்கு பின், காங்கிரசில் முக்கியத்துவம் கிடைக்காததால் வெளியேறி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற, தனி கட்சியை ஆரம்பித்தனர்.
கடந்த, 1989இல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,- ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்விக்குப் பின், கட்சியைக் கலைத்து, வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
அக்கட்சியின், தமிழக தலைவராக இருந்தார். பின், நிரந்தரமாக அரசியலை விட்டு ஒதுங்கினார். சிவாஜியின் மறைவுக்கு பின், அவரது இளைய மகன் பிரபுவை, காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது; பிரபு மறுத்து விட்டார்.
இந்நிலையில், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் மகனுடன், பா.ஜ.,வில் இணைய விரும்புகிறார். இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகளுடன், ராம்குமார், சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026