Freelancer / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை கஸ்தூரி மீது, தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை - எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாதுகாப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி மீது, தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பொலிஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் பொலிஸார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் பொலிஸார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க பொலிஸார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, கஸ்தூரி தனது கருத்துகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக, பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago