Ilango Bharathy / 2022 நவம்பர் 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகை சன்னி லியோன், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், அவ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அந்நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை.
அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர் அளித்த புகாரின் பேரில், மாநில குற்றப்பிரிவு பொலிஸார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநில குற்றப்பிரிவு பிரிவு பொலிஸார் தனக்கு எதிராக தாக்கல் செய்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி, கேரள ஐகோர்ட்டில் சன்னி லியோன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான்,சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்குத் தடை விதித்துள்ளார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026