A.K.M. Ramzy / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அனுஷ்கா கொஞ்சம் எடை கூடி வயது ஏறினாலும் இன்னும் ‘பேச்சலர்’ வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். சினிமா அனுபவம் மற்றும் நடிகைகள் படும் கஷ்டங்கள் பற்றி இவ்வாறு கூறுகின்றார் அனுஷ்கா.
“நான் வாழ்க்கையில் எதையும் திட்டமிடுவது இல்லை. ஆனால், யோசித்து முடிவு எடுத்த பிறகு அதில் இருந்து பின்வாங்க மாட்டேன். நினைத்ததை சாதிக்காமல் விடுவதும் இல்லை. வெளியில் இருந்து பார்க்க சினிமா துறை கவர்ச்சியாக தெரியும். நடிகைகள் சுகமாக சந்தோஷமாக இருப்பதாகவே நிறைய பேருக்கு தோன்றும்.
அந்த வெளிச்சத்துக்கு பின்னால் உள்ள நடிகைகளின் கஷ்டத்தையும் உழைப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் அத்தனை நாள்களும் எப்போது சாப்பிடுவார்கள். எத்தனை மணிநேரம் தூங்குவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
அந்த கஷ்டத்தை நடிகைகள் வெளியில் காட்ட முடியாது. சோர்வை வெளிப்படுத்தக் கூடாது. சிரிப்பு முகத்தில் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கதாபாத்திரமாகவே மாறி விட வேண்டும். சினிமாவுக்கு வர விரும்பும் எந்த நடிகையாக இருந்தாலும் இதனை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.”இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .