2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நண்பனைக் காப்பாற்றச் சென்ற 6 பேர் மரணம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீரில் மூழ்கிய நண்பர்களை அடுத்தடுத்து காப்பாற்ற சென்ற 6 பேர் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில், கரஸ்ரோட்டா ஆற்றில் கடந்த 18 ஆம் திதி ஹோலி பண்டிகையைக்  கொண்டாடி விட்டு குளிப்பதற்காக நண்பர்கள் சிலர் ஆற்றுக்கு சென்றுள்ளனர். 

இதன்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ள நிலையில் இதனை கவனித்த அருகில் இருந்த மற்றொருவர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அவரும் நீரில் மூழ்கி உள்ளார்.  இதனையடுத்து தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்துச் சென்ற அனைவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .