2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

`நன்றி ` கூறினால் சிறப்புத் தள்ளுபடி

Ilango Bharathy   / 2022 மார்ச் 10 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவகமொன்றில் `நன்றி, ப்ளீஸ் , வாழ்த்துக்கள்` போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர்களுக்கு  சிறப்பு  தள்ளுபடி வழங்கப்பட்டுவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த  ‘தக்ஷின் 5 ‘ என்ற உணவகத்திலேயே இவ்வாறு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வியாபார யுத்தி பலரையும் கவர்ந்துள்ள நிலையில் குறித்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும்  இவ் உணவகத்தின்  புதிய வியாபார தந்திரத்தை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அவ் உணவகத்தின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில் ”இன்றைய உலகில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சின்னச் சின்ன நற்பண்புகள் மிகவும் அரிதாக தென்படுகிறது. இதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த புதிய முயற்சியை நாங்கள் தொடங்கினோம்." என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .