A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
'நன்றி மறப்பது நன்றன்று' என்று சசிகலாவைச் சந்தித்த பின் சரத்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் இன்று (பெப்ரவரி 24) கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தியாகராயநகரிலுள்ள தனது இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.
அவரது வீட்டுக்குச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார், அவரின் மனைவி ராதிகா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.
அதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:''சசிகலாவின் உடல் நலனை விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். கொரோனா வால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள அவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தோம்.
ஏற்கெனவே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தொலைபேசி மூலமாகப் பேசினேன். கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கும் போதெல்லாம் சசிகலா உடன் இருந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற எண்ணத்தின் அடிப்படையில், நாங்கள் பயணித்த காலங்களை நினைவுகூறி சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்தோம்.'இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago