Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நர்ஸ் வீட்டில் 500 ஆணுறைகள் 150 ஆண் நண்பர்கள் + கள்ளக்காதலன்
தேனி:
நர்ஸ் ஒருவரை படுகொடூரமாக கொன்றுள்ளனர். இதற்கான காரணங்களையும், கொலை குற்றவாளியையும் தேனி மாவட்ட பொலிஸார் அம்பலப்படுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது பாப்பம்மாள்புரம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுரேஷ்.. திண்டுக்கல்லில் கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார்...
இவருடைய மனைவி செல்வி 43 வயதாகிறது.. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சீனியர் நர்ஸாக வேலை பார்ப்பவர். 17 வருடங்களாகவே இங்கு நர்ஸாக உள்ளார்.. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவருமே பிரிந்துவிட்டனர். சுரேஷ் திண்டுக்கல்லிலேயே தனியாக வசித்து வருகிறார். அங்கேயேதங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார்.
அதேபோல், ஆண்டிபட்டியிலேயே செல்வி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ரத்த வெள்ளத்தில் செல்வி விழுந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு இந்த கொலை தொடர்பான விசாரணையையும் கையில் எடுத்தனர். செல்வியின் வீட்டிற்கு சென்று ஆதாரங்களை சேகரிக்க முயன்றனர்.
அப்போதுதான் வீட்டில் 500க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருப்பதை கண்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி உல்லாசமாக இருந்ததற்கான தடயங்களும் அங்கு சிக்கின. இதற்கு பிறகு, செல்வியின் செல்போன் ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.. அதில் செல்வி பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் செல்வியுடன் தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டோர் லிஸ்ட்டை எடுத்தனர் பொலிஸார். அந்த லிஸ்ட்டில் ராமச்சந்திரபிரபு என்பவர் மேல் பலமான சந்தேகம் விழுந்தது.
இவர் கோடாங்கிபட்டியை சேர்ந்தவர். கம்பம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். 34 வயதாகிறது.. இவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை துவங்கியது. ஆனால், அவரிடம் போதுமான விஷயத்தை பொலிஸாரால் அப்போது பெற முடியவில்லை. இதனால், விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும் என்று எச்சரித்து ராமச்சந்திர பிரபுவை அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவரோ, மறுநாளே அதாவது கடந்த 11 ஆம் திகதியே ஊத்துக்காடு என்ற வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போதுதான் ராமச்சந்திரபிரபு மீது பொலிஸாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து, ராமச்சந்திரபிரபு மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போதுதான் ஏராளமான திடுக் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட செல்வியும், தற்கொலை செய்து கொண்ட் ராமச்சந்திரபிரபுவும், 10 வருடத்துக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே கள்ளக்காதலும் இருந்துள்ளது. இதற்கு பிறகு இருவருமே டிரான்ஸ்பர் ஆகி வேறு வேறு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் தொடர்பு நீடித்து வந்திருக்கிறது. அத்துடன் பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்துள்ளது. செல்விக்கு ராமச்சந்திரபிரபு கடன் கொடுத்துள்ளார் போலும்.
அந்த பணத்தை செல்வியிடம் கேட்டும் அவர் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. எனவே, சம்பவத்தன்று மதியம் 2 மணிக்கு செல்வியின் வீட்டிற்கு ராமச்சந்திரபாபு சென்றுள்ளார். அப்போது செல்விக்கும், அவருக்கும் தகராறு வந்துள்ளது.
அப்போது ஆத்திரத்தில் தாக்கியதில் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.செல்வி பிணமாகி விழுந்ததும், அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க நகையை எடுத்து கொண்டு ராமச்சந்திரபாபு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அந்த நகையை ஒரு நகைக்கடையில் அடகு வைத்து பணம் வாங்கி உள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமல்ல, சம்பவத்தன்று செல்வி வீட்டிற்கு ராமச்சந்திரபாபு சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது.. வீட்டிற்குள் ரத்தக்கறை படிந்த கால்ரேகை தடயங்கள், அச்சு அசலாக ராமச்சந்திரபிரபுடன் கால்தடத்துடன் பொருந்திபோனது. அடகு வைக்கப்பட்டிருந்த செல்வியின் நகையும் உறுதி செய்யப்பட்டது.
இறுதியில் ராமச்சந்திரபிரபு தான் செல்வியை கொன்றது உறுதியாகி உள்ளது.. கள்ளக்காதலர்கள் என்றாலும், செல்விக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதேபோல ராமசந்திரனுக்கும் பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
36 minute ago
57 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
4 hours ago
7 hours ago