Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 29 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
மழையால் பாதிக்கப்பட்டு, உடல் இரண்டு துண்டாகும் நிலையில் உயிருக்கு போராடிய நாக பாம்புக்கு, ஒக்சிஜன் முகமூடி வசதியுடன் அறுவைச் சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கன மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இயந்திரம் கொரட்டூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நேற்று நடந்தபோது, அங்குள்ள புதரில் பதுங்கி இருந்த நாக பாம்பு, இயந்திரத்தில் சிக்கியது. இதனால், நாக பாம்பின் உடல் இரண்டு துண்டாகும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த, வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று, பாம்பை மீட்டனர்.
மரணத்தின் விளிம்பில் இருந்த நாக பாம்புக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை டாக்டர்கள் முடிவு செய்தனர். அடையாறிலுள்ள மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையின் போது, மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, பாம்பின் முகப் பகுதிக்கு ஒக்சிஜன் செல்லும் வகையிலான முகமூடி அணிவிக்கப்பட்டது.
அதன்பின், உடலின் வெட்டுப்பட்ட இடத்தில், காயத்துக்கு மருந்து செலுத்தி, டொக்டர்கள் தையல் போட்டு, அறுவை சிகிச்சையை நிறைவு செய்தனர். பாம்பு நல்ல நிலையில் உள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர். மரணத்தின் விளிம்புக்கு சென்ற நாக பாம்புக்கு, வனத்துறையின் சாதுர்யமான நடவடிக்கையால் மறுவாழ்வு கிடைத்துஉள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .