2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

நாய்க் குட்டிக்காக உக்ரைனை விட்டு வெளியேற மறுக்கும் இந்தியர்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் இடம்பெற்று வரும் போருக்கு  மத்தியில் இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவரொருவர், ”தனது நாய்க்குட்டி இல்லாமல்  உக்ரையை விட்டு வெளியேற மாட்டேன் ” எனத் தெரிவித்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிழக்கு உக்ரைனில் உள்ள  பல்கலைக்கழகமொன்றில் படித்து வரும்  ரிஷப் கௌஷிக் என்பவரே இவ்வாறு தெரவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ”எனது நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளையும் நான் பின்பற்றிவருவதோடு  அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

எனினும் மேலும் மேலும் ஆவணங்கள் கோரப்பட்டு அதிகாரிகளால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றேன்.

தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்களால்  எனது நாய்க்குட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. எப்பொழுதும் அது அழுதுகொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்க அதிகாரிகள், தயவுகூர்ந்து உங்களால் முடிந்தால், எங்களுக்கு உதவுங்கள். " எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாய்க் குட்டியைப் பிரிய மனமில்லாமல் உக்ரைனை விட்டு வெளியேற மறுத்த குறித்த இளைஞனின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X