2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

நினைவிடம் கட்டுவதில் விருப்பமில்லை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 13 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின்  புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக  மும்பையில் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராம் கதம், என்பவர் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் இதற்கு எதிராக சர்ச்சை கருத்துகள் எழுந்து வருகிறது. மேலும், சிவாஜி பூங்காவில் சிவசேனா உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால் பாஜகவின் கோரிக்கையை சிவசேனா நிராகரிக்கிறது என ராம் கதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து  கருத்துத் தெரிவித்த லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் ”மும்பை சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X