Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 23 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவர் அண்மையில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி இலக்கியாவை உறவினர் ஒருவரின் உதவியுடன், பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது அவர்களை வழிமறித்த போக்குவரத்துப் பொலிஸார், கர்ப்பிணி உட்பட மூன்று பேர், ஒரே மோட்டார் வாகனத்தில் பயணிப்பது விதி மீறல் எனக்கூறி, 1000 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
எனினும் முரசொலி, தன்னிடம் பிரசவ செலவிற்கு மாத்திரமே பணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை பொருட்படுத்தாத குறித்த போக்குவரத்துப் பொலிஸார், ”அபராதம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் ” எனக் கூறி குறித்த மோட்டார் சைக்கிளின் சாவியைப் பறித்து வைத்துக்கொண்டு, கர்ப்பிணி உட்பட மூவரையும், 1 மணி நேரத்திற்கு மேலாக வீதியோரத்தில் காத்திருக்க வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு வந்த பொலிஸ் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சம்பந்தப்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரிடம் பேசி, இரு சக்கர வாகனத்தின் சாவியை பெற்றுக்கொடுத்து, கர்ப்பிணி யை அவரது கணவருடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
3 பேர் மோட்டார் சைக்கிளில்செல்வது விதிமீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. விதி மீறலுக்காக அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தக்கூறி அனுப்பி வைத்திருக்கலாம், அல்லது கர்ப்பிணியை ஒரு ஆம்புலன்ஸை வரவைத்து மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்திருந்தால் கூட, இது பாராட்டத்தக்க நடவடிக்கையாக அமைந்திருக்கும் என இச்சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
.
33 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago