A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
நீதிமன்றத்துக்கு யாரேனும் சென்றால், அங்கு தீர்ப்புக்காக அந்த நபர் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும். அங்கு தீர்ப்பு கிடைக்காது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'இந்தியா டுடே' பத்திரிகை சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பங்கேற்றார். நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின், தற்போது மாநிலங்களவை எம்.பி.,யாக ரஞ்சன் கோகய் இருந்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் “மக்கள் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால் ஏன்தான் நீதிமன்றத்துக்கு வந்தோம் என்று கூறும் அளவுக்கு வேதனைப்படுகிறார்கள்.
நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கி ன்றன, நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெற வில்லை. இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு, செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். நீதிபதிகளைத் தேர்வு செய்வதிலும், பயிற்சி அளிப்பதிலும் மாற்றம் கொண்டுவருவது அவசியம் " எனத் தெரிவித்தார்.
ரஞ்சன் கோகய் பதவியில் இருந்தபோது, அவர் மீது பாலியல் புகார் வந்தது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மொய்த்ரா பேசி இருந்தார். அவர் மீது வழக்கு ஏதும் போடுவீர்களா என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு கோகய் பதில் அளிக்கையில் “ என்னை குறிவைத்து பேசும் நபர்களுக்கு எதிராக நான் வழக்கு ஏதும் போடப்போவதில்லை. ஏனென்றால், நீதிமன்றத்துக்கு நான் சென்றால், எனக்கு தீர்ப்புக் கிடைக்காது.அதற்காக நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago