2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீறு பூத்த நெருப்பு!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

மகன் துரை வைகோவுக்கு கட்சி பதவி தரக் கூடாது என்பது தமது விருப்பம் என கூறி வரும் வைகோ, இரகசிய வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தாரா? ஆதரித்து வாக்களித்தாரா? என அதிருப்தி நிர்வாகிகள் கேள்வி எழுப்புவதாக மதிமுக தலைமையகமான தாயக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்  (ம.தி.மு.க.) மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தனது மகன் துரை வைகோவை கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்க ஆதரவு பெறப்பட்டது. அதன்படி நியமிக்கப்பாட்டார் துரை வைகோ.

இந்நிலையில் அதிருப்தியாளர்களை மதிமுக தலைமையகமான தாயக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனராம். அப்போது, ஏதோ ஒரு காரணத்துக்காக கூட்டத்துக்கு நீங்கள் வரவில்லை. அது ஒன்னும் பிரச்சினை இல்லை. உடனே நீங்கள், தலைமை கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவின் நியமனத்தை ஆதரித்து கடிதம் அனுப்புங்கள்.. அது போதும் என வலியுறுத்தினராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .